இலங்கையில் தேசிய மாணவர் படையணி மற்றும் இந்தியாவின் தேசிய மாணவர் படையணிக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கையில் தேசிய மாணவர் படையணி மற்றும் இந்தியாவின் தேசிய மாணவர் படையணிக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை மற்றும் இந்திய மாணவர் படையணிகளுக்கிடையில் தற்போது நடைமுறையிலுள்ள இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை அதிகரிப்பதற்கு பங்களிப்புச் செய்வதுடன், இப்பங்களிப்புக்களைத் தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு குறித்த நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இவ் ஒப்பந்தத்தின் மூலம் ஒருங்கிணைந்த விசேட பயிற்சிகள் மற்றும் தலைமைத்துவ வேலைத்திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அமுல்படுத்தல் போன்ற பணிகளுக்கு இரு நாடுகளின் மாணவர் படையணி அங்கத்தவர்களின் பரிமாற்று வேலைத்திட்டங்கள் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கை தேசிய மாணவர் படையணிக்கும், இந்திய தேசிய மாணவர் படையணிக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
