ஹட்டன் பிரதான வீதிகளில் ஒருவழிப் போக்குவரத்து ஆரம்பம்!
ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான வீதிகளில் சுமார் ஒன்பது மணி நேரமாகத் தடைபட்டிருந்த போக்குவரத்து இன்று (05) அதிகாலை 6.30 மணியளவில் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான வீதிகளில் சுமார் ஒன்பது மணி நேரமாகத் தடைபட்டிருந்த போக்குவரத்து இன்று (05) அதிகாலை 6.30 மணியளவில் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் மலைச்சரிவிலிருந்து பெருமளவு மண் மற்றும் கற்கள் வீதியில் சரிந்ததால், அவற்றை அகற்றும் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால், மலைச்சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.