ஜோன்ஸ்டனுக்கு பிணை
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று வாக்குமூலம் வழங்க அவர் முன்னிலையானார். பொல்கொல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்குக் கதிரைகளைக் கொள்வனவு செய்த போது உரிய கொள்முதல் நடைமுறைக்கு முரணாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு 79 இலட்சத்து 73,114 ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் இன்று கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கே பிணை உத்தரவு கிடைத்தது.
 (1)-623227-560028.jpg)