1 source
கைவிடப்பட்ட வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு
அரச மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர், டொக்டர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.இடமாற்ற நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம்(04) காலை 08 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இன்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர், டொக்டர் வாசன் இரட்ணசிங்கம் இந்த விடயத்தை அறிவித்தார்.
