"புதிய கல்விச் சீர்திருத்தங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாட்டின் ஊடகங்கள் முன்னோடிப் பங்காளிகளாகும்": ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தபோது பிரதமர் தெரிவிப்பு.
நாடொன்றின் எதிர்காலப் பயணம் கல்வியிலேயே தீர்மானிக்கப்படுவதால், புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் தேசிய உரையாடலொன்றை உருவாக்கி, அதனை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாட்டின் ஊடகங்களே முன்னோடிப் பங்காளிகளாக விளங்குகின்றன என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
