நீதிக்கான நீள் பயணம் கவனயீர்ப்பு!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று (30) கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று (30) கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் உண்மையை அறிவதற்கான உரிமை, நீதி மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகியவற்றை மையப்படுத்துவதோடு, உலகளாவிய ரீதியில் இந்தச் சாசனத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் இத்தினம் வலியுறுத்துகிறது. சர்வதேச ரீதியில் இக்கொடிய குற்றத்தைத் தடுப்பதற்கான சட்டகட்டமைப்புகள் காணப்பட்டாலும், தற்போதைய உலகளாவிய நிலைமையானது தொடர்ந்தும் கவலையளிப்பதாகவே ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story