தேஷபந்து சிறிசுமன கொடகே காலமானார்..
கொடகே புத்தக வௌியீட்டு நிறுவனத்தின் ஸ்தாபகரான தேஷபந்து சிறிசுமன கொடகே காலமானார்.அவர் தனது தனது 89ஆவது வயதில் நேற்றிரவு(28) காலமானார்.1956ஆம் ஆண்டில் கோடகே புத்தக வௌியீட்டு நிறுவனத்தை நிறுவி, நாட்டின் இலக்கியத்துறையை மேம்படுத்தும் வகையில் தனித்துவமான பணியில் ஈடுபட்ட சிறிசுமன கொடகே, தொடர்ச்சியாக 38 வருடங்களாக ஆண்டில் அதிக வெளியீடுகளை வெளியிட்ட புத்தகப் பதிப்பகத்திற்கான அரச விருதையும் வென்றுள்ளார்.வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான கொடகே கையெழுத்து பிரதி போட்டி, கொடகே தேசிய சாகித்திய விருதுகள் ஆகியன நாட்டில் இலக்கியத்துறையின் முன்னேற்றத்திற்காக அவர் அறிமுகப்படுத்திய தலைசிறந்த படைப்புகளில் சிலவாகும்.சிறிசுமன கொடகேவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை மாலை பொரளை பொதுமயானத்தில் இடம்பெறவுள்ளன.
