1 source
இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் அரச துறை முறைமை நவீனமயமாக்கல் தொடர்பான உலக வங்கி குழுமத்துடனான கலந்துரையாடல்
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் அரச துறையின் தொழில்நுட்ப அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில், கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன அவர்களுக்கும், உலக வங்கி குழுமத்தின் முதன்மைத் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட துணைத் தலைவருமான திருமதி ஏமி டொஹர்ட்டி (Amy Doherty) தலைமையிலான தூதுக்குழுவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று (17) டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் நடைபெற்றது.
