ரஷ்யா நாட்டின் இலங்கை க்கான தூதுவர் மற்றும் மீன்பிடித் துறை அமைச்சர் இடையே சந்திப்பு
இலங்கை மற்றும் ரஷ்யா இடையே இருதரப்பு மீன்பிடித் துறை ஒத்துழைப்பு, சமுத்திர வர்த்தகம் மற்றும் பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பான விசோட கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர் லெவான் எஸ். டிஸகாரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் மீன்பிடி நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையே நேற்று (28) மீன்பிடி அமைச்சில் நடைபெற்றது. இந்த நல்லிணக்க சந்திப்பின் போது இலங்கை மற்றும் ரஷ்யா இடையே காணப்படும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துதல், மீன்பிடித் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை பரவலாக்குதல், இலங்கை மீன் உற்பத்திகளுக்காக சந்தை வாய்ப்புகளை சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
