1 source
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 630 முறைப்பாடுகள்
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 630 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் மாத்திரம் குற்றங்களுடன் தொடர்புடைய 11 கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் மூவர் அரசியல்வாதிகள் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 07 அரச அதிகாரிகளுக்கு எதிராக ஜனவரி மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
