12 வருடங்களின் பின்னர் மரணதண்டனை
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளியொருவருக்கு இன்று(02) மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.2014ஆம் ஆண்டு முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கு, குரவில் பகுதியில் நடைபெற்ற விருந்தொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது 19 வயதான இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.அதன் பின்னர் வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜாவினால் குற்றவாளிக்கு 12 வருடங்களுக்கு பின்னர் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
