"எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்" பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
"எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சரசவி திரியோ அபிமன்" - மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளைப் பாராட்டும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் ஆகஸ்ட் 22ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். வட மாகாணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 75 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியையும் பிரதமர் இதன்போது வழங்கி வைத்தார்.
