இலங்கை சுங்கத்தின் காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது
இலங்கை சுங்கத்தினால் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை" குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
