கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மழை
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
-552094.jpg)