யோஷிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸவிற்கு சொந்தமான தனிப்பட்ட வங்கி கணக்கொன்றில் 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இன்று(10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவை தலா 02 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க இன்று உத்தரவிட்டார்.அத்துடன், யோஷித ராஜபக்ஸவிற்கு எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளிநாட்டு பயணத்தடை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 03ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
