1 source
ஜனாதிபதி தலைமையில் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை துரிதப்படுத்துவதில் எழுந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடல்
நீர்ப்பாசனக் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக் கொடுக்க முடியும் - ஜனாதிபதி கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம் ரஜரட்ட மக்களின் பாரிய எதிர்பார்ப்பாகும். அதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செய்யும் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். - வரலாற்று சிறப்புமிக்க தந்திரிமலை ரஜமகா விஹாராதிபதி, வண. தந்திரிமலே சந்தரதன தேரர்
