1 source
"திட்வா" அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த சொரணாதொட்டவைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
அண்மையில் ஏற்பட்ட "திட்வா" அனர்த்த நிலைமையினால் வீடுகளை முழுமையாக இழந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தின் சொரணாதொட்ட பிரதேச செயலகப் பிரிவில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நேற்று (07) நடைபெற்றது.
