ஹோட்டல் ஒன்றில் இருவர் மீது கொடூரத் தாக்குதல்
காலி, உடுகம கோரலேகம பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகுந்த மூவர், அங்கிருந்த இருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காலி, உடுகம கோரலேகம பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகுந்த மூவர், அங்கிருந்த இருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர், ஹினிதும தொகுதி பிரபல அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய ஆதரவாளர் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவரது மனைவி நாகொட பகுதியில் கிராம உத்தியோகத்தராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏனைய இரு சந்தேக நபர்களும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.