நாட்டின் சில பகுதிகளில் 100mm மழை
எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அரச தகவல் திணைக்களத்தில் இன்று(10) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.பலத்த மழை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
