தமது கலாச்சார அடையாளத்துடன் வாழ்வதற்கு எந்தவொரு சமூகமும் அச்சம் அடையத் தேவையில்லை என ஜனாதிபதி வலியுறுத்து
எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின் உள ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
