கோறளைப்பற்று மத்தியில் 5,000 வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளிலான 5,000 வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ், உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு "தமன்கெம தெனக் லஸ்ஸன ஜீவிதயக்" மானிய வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
