1 source
சட்டவிரோத வௌிநாட்டு சிகரெட்களுடன் மூவர் கைது
ஒரு கோடி 28 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வௌிநாட்டு சிகரெட்களுடன் 03 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினால் இன்று(05) அதிகாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.06 பயணப்பைகளில் 85,800 சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
