இனவாத முயற்சிகளை தோற்கடித்து மட்டக்களப்பு பால்பண்ணையாளர்களுக்கு நிரந்தர தீர்வு : நாட்டில் எவ்வித இனவாத பிரச்சனைகளுக்கும் இடமளிப்பதில்லை என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி!
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நேற்று (29) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கட்டடத் தொகுதியில் இடம் பெற்றது. மாவட்டத்தில் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல தொடர்பாக இதன் போது பரவலாக கலந்துரையாடப்பட்டதுடன், இப்பிரச்சினைகளின் பின்னணியில் செயல்படுத்தப்படும் இனவாத சூழ்ச்சிகள் மற்றும் முயற்சிகளை முழுமையாக தோற்கடித்து சகல இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மற்றும் நிரந்தரமான தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
