1 source
"விபத்துக்களைக் குறைப்பதற்காக தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்" - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான பிரதான காரணியாகவும், தடுக்கக்கூடிய மரணங்கள் மற்றும் ஊனங்களைப் பாதிக்கும் முக்கிய காரணியாகவும் இனங்காணப்பட்டுள்ள விபத்துகளைக் குறைப்பதற்கான தேசிய முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், பதினொன்றாவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை ஆரம்பிக்கும் பிரதான வைபவம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (06) காலை சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
