எதிர்கால உலகிற்கு ஏற்ற கல்வி முறையைக் கட்டியெழுப்புவதில் பரீட்சைகள் திணைக்களம் தனித்துவமான பங்களிப்பை ஆற்றுகிறது -இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதும், எதிர்கால உலகிற்கு ஏற்றதுமான கல்வி முறையைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் நம்பகமான பங்காளியாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தனித்துவமான பங்களிப்பை ஆற்றி வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
