1 source
தெவுந்தர துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் உயிரிழப்பு
தெவுந்தர பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர், உயிரிழந்துள்ளார்.மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்தவர்கள், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.போதைப்பொருள் தொடர்பான முரண்பாடு இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
-554065.jpg)