நாமல் ராஜபக்ஷவுக்கு ஒரு வழக்கிற்கு பிணை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) பிணை வழங்கியுள்ளது. நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
