கேகாலை ஆரோக்கியா சுகவாழ்வு மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நடல்
இலங்கை அரசாங்கம் சுகாதார அமைச்சுடன் இணைந்து மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் கொள்கைப் பிரகடனத்தின் கீழ் முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக, நாடளாவிய ரீதியில் 1,000 "ஆரோக்கியா" நலன்புரி நிலையங்களை (Wellness Centers) நிறுவும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னிட்டு, கேகாலை மாவட்டத்திற்கான நலன்புரி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (01) நடைபெற்றது. கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான கலாநிதி தம்மிக்க படபெந்தி அவர்களின் தலைமையில், தெஹியோவிற்ற, ஈரியகொல்ல சுகாதார வைத்திய அதிகார காரியாலய வளாகத்தில் இந்நிகழ்வில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. கேகாலை மாவட்ட ஊடகப் பிரிவு
