பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்
திருகோணமலை காணி விவகாரத்துடன் தொடர்புடைய பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கரையோர பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் அத்துமீறிய கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று(02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரைக்கு சொந்தமானதென கூறப்படும் காணியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை பொலிஸார் அகற்றுவதற்கு முயற்சிப்பதாகக் கூறி நவம்பர் 16ஆம் திகதி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.எனினும் சம்பந்தப்பட்ட காணியில் கடற்கரைக்கு அருகில் உணவகமொன்று அமைக்கப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது.கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர் உணவகத்தை அகற்றுவதற்கு முயற்சித்தமையே எதிர்ப்பிற்கான பிரதான காரணம் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காகவும் அத்துமீறிய கட்டுமானத்திற்காகவும் 11 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்சதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட 04 தேரர்கள் இன்று(02) விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்களில் உள்ளடங்குகின்றனர்.
