ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் அதனைப் பலவீனப்படுத்துவதற்கு அல்ல, மாறாக, பலப்படுத்துவதற்கே - எதிர்க்கட்சியினர் மக்களைத் திசைதிருப்பி, பழைய ஊழல் அரசியல் கலாசாரத்தைப் பாதுகாக்க முயல வேண்டாம் - பிரதமர்
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமைக்குக் காரணம், அதன் நோக்கங்களைப் பலவீனப்படுத்துவது அல்ல; மாறாக, அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது இனங்காணப்பட்ட நடைமுறை, நிறுவன ரீதியான மற்றும் மனிதவளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஊழல் எதிர்ப்புச் செயன்முறையை மேலும் பலப்படுத்துவதே ஆகும் என, ஒக்டோபர் 08 ஆம் திகதி ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும்போது பிரதமர் வலியுறுத்தினார்.
