1 source
மாலைதீவு ஜனாதிபதி நாடு திரும்பினார்..
இலங்கைக்கான 03 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, மாலைதீவு ஜனாதிபதி, கலாநிதி Mohamed Muizzu உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று(06) காலை நாடு திரும்பினர்.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி கடந்த 03ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்தார்.இந்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் மாலைதீவு ஜனாதிபதிகள் இடையே இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதோடு முக்கியத்துவம் வாய்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
