250 இளநீர் கிராமங்களை நிறுவும் தேசிய திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது இளநீர் கிராமம் தெஹிகமவில்....
"சிலோன் கிங் இளநீர் கிராமம் - 250" என்ற தேசிய திட்டத்துடன் இணைந்து, பதுளை மாவட்டத்தில் இரண்டாவது தென்னை கிராமம் நிறுவும் நிகழ்வு அண்மையில் (10) நடைபெற்றது. நாடு முழுவதும் 250 இளநீர் கிராமங்களை நிறுவும் தேசிய திட்டத்தின் முதல் கட்டம் செப்டம்பர் 02 அன்று ஆரம்பமானது, அதனை முன்னிட்டு பதுளை மாவட்டத்தில் இரண்டாவது கிராமமும் ஆரம்பிக்கப்பட்டது.
