1 source
ரூ. 1.5 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 81 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் வட கடலில் கைது
இலங்கை கடற்படையினர் நேற்று (27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரை பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தெரு மதிப்பில் ரூ. 1.5 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய சுமார் நாற்பத்தைந்து கிலோ ஐந்நூறு கிராம் (45.5) ஐஸ் போதைப்பொருள் மற்றும் முப்பத்தைந்து கிலோ எழுநூறு கிராம் (35.7) ஹெரோயின் போதைப்பொருட்களுடன் டிங்கி படகு (01) ஒன்றையும் சந்தேகநபர் (01) ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
