1 source
ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீண்டும் சேவைக்கு..
65 வயதிற்குட்பட்ட ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.முதலாம் தர மற்றும் 2ஆம் தர ஜெய்லர், சார்ஜன்ட், ஒழுங்குமுறை அதிகாரிகள், தாதியர் மற்றும் மருந்து கலவையாளர் பதவிக்காக இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ.கஜநாயக்க தெரிவித்தார்.
