முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து வருகின்றது.இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு இன்றைய தினம் முள்ளியவளை கமநல சேவை நிலய நெல் களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
