இலங்கை மகளிர் சாரணர் சங்கத்தின் மாற்றுத் திறமைகளைக் கொண்ட மகளிர் சாரணர் பிரிவு நூற்றாண்டு நிறைவு
ஊனமுற்ற மகளிர் சாரணருக்கு வழங்கப்படும் உயரிய "Blue All Round Cord" விருது பிரதமரால் வழங்கிவைப்பு ஊனமுற்ற பிள்ளைகளின் உரிமைகளை உறுதிப்படுத்திச் சம வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஊனமுற்றிருத்தல் அல்லது வேறு விசேட தேவைகளைக் கொண்டிருத்தல் ஒரு பிள்ளையின் எதிர்காலப் பயணத்திற்குத் தடையாக அமையக்கூடாது என்றும், பிள்ளைகளின் உண்மையான திறமைகளுக்கு முன்னுரிமையளித்துத் தடைகளற்ற, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைக் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
