1 source
கொட்டும் மழையிலும் 26ஆவது வாரமாக தொடரும் மயிலிட்டி மக்களின் நிலமீட்புப் போராட்டம்!
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணம் - மயிலிட்டி மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 26ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது. கொட்டும் மழை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் இன்று (16.10.2026) குறித்த போராட்டம் நடைபெற்றது.
