1 source
16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது
சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
