1 source
அல்டிமேட் சம்பியனாக மகுடம் சூடி வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நேற்று (13) நடைபெற்ற அங்குரார்ப்பண உலக தடகள 'அல்டிமேட் சம்பியன்ஷிப்' (World Athletics Ultimate Championship) தொடரில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 91.09 மீற்றர் தூரத்திற்குப் ஈட்டியை எறிந்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சம்பியன் பட்டத்தை வென்றார்.
