1 source
வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல், மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக லக்விஜய நிலக்கரி மின்நிலையம் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைவாகப் பிரதான கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. அதற்கமைய, தற்போது லக்விஜய மின்நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
