கிராமத்தின் குரலுக்கு தீர்வு தேடும் பிரஜாசக்தி! – மட்டக்களப்பில் விசேட தேசிய வேலைத்திட்டம்
மட்டக்களப்பில் விசேட பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் பங்கேற்புடன் இன்று (11) காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
