இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில்..
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நாளை மறுதினம்(29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார்.துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் கீழ் குற்றவியல் பயமுறுத்தல், தூற்றி அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.துப்பாக்கியை காண்பித்து பெண்ணை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணொருவருடன் காணி தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.சம்பவம் தொடர்பில் குறித்த பெண் இளவாலை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருந்தார்.
