1 source
மலையக ரயில் போக்குவரத்துக்கு மீண்டும் பாதிப்பு
பேராதனை மற்றும் கெலிஓயா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட அகுணாவல பகுதியில் இன்று மாலை மீண்டும் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று மாலை 6.20 மணியளவில் குறித்த ரயில் மார்க்கத்தில் இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
