1 source
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு
70 வயதுக்கு மேற்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு வங்கிக்கணக்குகளில் 3ஆம் திகதி இரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்தது. 6,18,352 முதியோருக்கான பணம் வங்கிகளில் வைப்பிலிடப்படுமென அறிவிக்கப்பட்டது. இதனைத் தவிர, அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்கு புதிதாக தகுதி பெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் கூறியது.
-560004.jpg)