சீரற்ற காலநிலையால் உள்ளூர் கிரிக்கெட், கால்பந்து, ரக்பி போட்டிகள் ஒத்திவைப்பு
நாட்டில் தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் உள்ளூர் போட்டிகள், இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் தொடர் மற்றும் இலங்கை ரக்பி சங்கத்தினால் நடத்தப்படும் மெலிபன் சவால் கிண்ண உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ரக்பி லீக் போட்டித் தொடர் உள்ளிட்டவை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
