லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் புதிய ஆலோசகராக கேன் வில்லியம்சன்
ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணி, அடுத்த பருவத்திற்காக (2026) தங்களது அணியின் வியூக ஆலோசகராக (Strategic Advisor) நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கேன் வில்லியம்சனை நியமித்துள்ளது.
