2 sourcesUpdated
திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்ல மாணவன் மீது தாக்குதல்: ஆசிரியருக்கு மன்று பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனடிப்படையில் மூன்று இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Summary
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சைவ சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேர கற்பித்தல் நடவடிக்கைக்காக ஆசிரியர் ஒருவர், இல்லத்தின் முகாமைத்துவ சபையின் அனுமதியின்றி வித்திய விருத்திச்சங்கத்தின் கல்வித்திட்டப்பணிப்பாளரின் பரிந்துரையில் இல்லத்திற்கு முறையற்ற விதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

