3 sourcesUpdated
நுவரெலியா - A7 வீதியில் பாரிய விபத்து : 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியா - தலவாக்கலை (A7) பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நானுஓயா, டெஸ்போர்ட் பகுதியில் இன்றைய தினம் (14) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Summary
கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், வெலிமடை - பொரலந்தை பகுதியிலிருந்து அக்கரபத்தனை பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பயணித்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இவ்வாறு மோதியுள்ளன. காயமடைந்தவர்கள் 1990 சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி சேவை மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


