1 sourceUpdated
சஞ்சனாவின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு அபார வெற்றி
சுற்றுலா அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (28) நடைபெற்ற ஒரேயொரு ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Summary
சஞ்சனா காவிந்தி மற்றும் ரஷ்மி நெத்ராஞ்சலி ஆகிய இருவரினதும் அபார துடுப்பாட்டங்கள், லிமன்சா திலகரட்ன மற்றும் ஷஷினி கிம்ஹானி ஆகிய இருவரினதும் அசத்தல் பந்துவீச்சு என்பன முக்கிய பங்கு வகித்தன. இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்கள் சேர்த்தனர். லிமன்சா திலகரட்ன சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஷஷினி கிம்ஹானி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..
