1 sourceUpdated
15 வயதுக்கு உட்பட்ட ப்ரிமா கிரிக்கெட் தொடர் ஆரம்பம்
இலங்கை கிரிக்கெட் சபையின் தேசிய வீரர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 50 ஓவர்கள் கொண்ட ப்ரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் தொடர் நேற்று (26) ஆரம்பமான நிலையில் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Summary
இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் (25) கொழும்பில் நடைபெற்றது. 2007 ஆம் ஆண்டு முதல் இத்தொடரின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராகச் செயற்பட்டு வரும் ப்ரிமா குழுமம், திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில், 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் தொடருக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றது.